![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZwqug3p2fdLNvt9GqRMlTRWPjwnvMpmGSnuq6bU4Lxlt7MBmZvkx6_qxh67S4rtjGY7s3zEahl8JFbAHvCorup_mq2kuO8nk1m0vV41zM4pCEIJEXPqNy5AixvIwI8i-ZxWJni44XhoxH/s400/anushka.bmp)
சென்னை::கவுரவ வேடத்தில் நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் பெற்றார் அனுஷ்கா. விக்ரம் நடிக்கும் ‘தாண்டவம்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையில் ‘சகுனி' படத்தில் கார்த்தியுடன் கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தில் 5 நிமிடமே வரும் இக்காட்சிக்காக அனுஷ்கா ரூ.25 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. நடிகர், நடிகைகள் கவுரவ வேடத்தில் நடிப்பது புதிதல்ல. ஆனால் ஒரு சிலர் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் நடிக்க வருகிறார்கள். இன்னும் சிலர் நட்புக்காக இலவசமாக நடிக்கின்றனர்.
கவுதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் ‘நடுநிசி நாய்கள் படத்தில் சமந்தா கவுரவ வேடத்தில் நடித்தார். அதேபோல் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சகுனியில் ஆண்ட்ரியா கவுரவ தோற்றத்தில் நடித்தார். ‘5 நிமிட காட்சிக்கு அனுஷ்கா ரூ.25 லட்சம் பெற்றாரா? என அவரது மேனேஜரிடம் கேட்டபோது அதுபற்றி கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
இதுபற்றி ஒரு இயக்குனர் கூறும்போது, ‘தீபிகா படுகோன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகள் கவுரவ வேடத்தில் நடிப்பது படத்துக்கு கூடுதல் பலத்தை தரும். அதுபோல் பிரபலங்களை நடிக்க கேட்கும்போது அவர்கள் அதிக சம்பளம் கேட்பது சகஜம். அவ்வளவு சம்பளம் கொடுத்து நடிப்பதும் வீண் இல்லை. சில சமயம் இத்தகைய கவுரவ தோற்றங்கள் படத்தின் வெற்றிக்கு உதவுவதுடன் அதில் நடிக்கும் நடிகர், நடிகைக்கும் மார்க்கெட் மதிப்பை கூட்டுகிறது என்றார்.
Comments
Post a Comment