ஒரே சீனில் 40 முறை நடித்த நடிகை!!!

Thursday,19th of July 2012
சென்னை::ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம். இது பற்றி அவர் கூறியதாவது: வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.

Comments