Monday, 2nd of July 2012
மும்பை::என் வாழ்க்கையில் 3 ஹீரோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றார் தீபிகா படுகோன்.
கோச்சடையான்Õ படத்தில் ரஜினி ஜோடியாக நடிப்பவர் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். அவர் கூறியதாவது:
Ôகோச்சடையான்Õ, Ôகாக்டெய்ல்Õ, Ôயே ஜவானி ஹே தீவானிÕ, Ôரேஸ் 2Õ ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். Ôகாக்டெய்ல்Õ படத்தில் நீச்சல் உடை அணிந்திருப்பது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் உடையில் நடித்தது மற்ற நடிகைகளின் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் அல்ல. இந்த பாத்திரத்துக்காக நான் ஸ்லிம் தோற்றத்துக்கு மாற வேண்டி இருந்தது. இதற்காக கடுமையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மேற்கொண்டேன். வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்தபோதும் இந்த பயிற்சியை தொடர்ந்தேன். இரவில் எவ்வளவு நேரத்துக்கு பிறகு ஷூட்டிங் முடிந்தாலும் பயிற்சியை செய்துவிட்டுத்தான் தூங்கச் செல்வேன். நட்சத்திர ஓட்டலில் சக நடிகர்கள் ருசியான உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அப்போதும் உணவு கட்டுப்பாட்டால் நான் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருப்பேன். இத்தகைய பயிற்சியால் எனக்கு சரியான விடை கிடைத்தது. ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியபோது என்னாலேயே எனது தோற்றத்தை நம்ப முடியவில்லை. சினிமாவில் நடிப்பதற்கு முன் நான் ஒரு விளையாட்டு வீராங்கனைதான். நடிக்க வந்தபிறகுதான் சினிமாவை பற்றி தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு படமும் எனக்கு அனுபவமாகவே இருக்கிறது. ‘நம்பர் ஒன் நடிகையாக விரும்புகிறீர்களா?Õ என்கிறார்கள். நம்பர் போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடினமாக உழைக்கிறேன். அதற்கு என்ன பலன் கிடைக்கிறதோ அதுபோதும். ஷாருக்கான், ரன்பீர் கபூர், சைப் அலிகான் என 3 ஹீரோக்களுடன் மாறி மாறி நடிக்கிறேன். இவர்களில் யாரை பிடிக்கும் என்கிறார்கள். இந்த 3 ஹீரோக்களுமே என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் முக்கிய பங்குவகிப்பவர்கள்.

Comments
Post a Comment