Tuesday, 3rd of July 2012
சென்னை::அமீர்கானின் தலாஷ் இந்திப்படத்தில் ரஜினி ஒரு பாடலுக்கு ஆடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி இதில் ஆடினால் படத்துக்கு உலகம் முழுவதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்றும், இதனால் படத்தை பெரும்தொகைக்கு விற்கலாம் என்றும் திட்டமிட்டு அவரை அமீர்கான் அணுகி வற்புறுத்துவதாகவும் ரஜினியும் ஆட சம்மதித்து விட்டதாகவும், இந்திப்பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.
இதில் ரஜினியுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் போன்றோரும் ஆட உள்ளதாக கூறுகின்றனர்.
பல்வேறு நாடுகளில் ரூ.50 கோடி செலவில் இந்த பாடலுக்கு காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரஜினிக்கு மட்டும் ரூ.15 கோடி சம்பளம் என்கின்றனர். கோச்சடையான் பட வேலைகள் முடிந்ததும் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது...
ரொம்ப நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் அமீர்கானின் தலாஷ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியை தோன்ற வைக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
இந்தியில் இப்போதைய ட்ரெண்ட்… ஷாரூக்கானோ சல்மான்கானோ அமீர்கானோ.. யார் படமாக இருந்தாலும் அதை ரஜினியுடன் முடிச்சுப் போட்டு செய்தி வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.
அது உண்மையா பொய்யா என்பதைவிட, அதன் மூலம் கிடைக்கிற பப்ளிசிட்டிதான் முக்கியமாகிவிடுகிறது. அந்த வகையில் ஏற்கெனவே ஷாரூக்கின் ரா ஒன் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று கூறி பெரிய அளவு விளம்பரம் செய்யப்பட்டது.
அதற்கு கைமேல் பலன் கிடைத்தது ஷாரூக்கானுக்கு. ரொம்ப அமெச்சூர்த்தனமாக அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்தாலும், ரஜினி என்ற ஒரே காரணத்துக்காக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக அந்தக் காட்சியை ரசிகர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்து தூம் 3-ல் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.
இப்போது அமீர்கான் முறை. தனது தலாஷ் படத்தில் ரஜினியை ஒரு பாடல் காட்சியில் தோன்ற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
இந்தக் காட்சியில் ரஜினி மட்டுமல்லாமல், அமிதாப், தர்மேந்திரா உள்பட பாலிவுட் பிரபலங்களும் தோன்றுவார்களாம். கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கூட இந்த பாடலில் இடம்பெறவிருக்கிறார்களாம்.
பல்வேறு நாடுகளில் உள்ள 50 லொகேஷன்களில், ரூ 50 கோடி செலவில் இந்தப் பாடல் காட்சி படமாகப் போகிறதாம்.

Comments
Post a Comment