நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள்: ஏழைகளுக்கு இலவச உணவு, ரசிகர்கள் ரத்ததானம்!!!:Vijay Advance Birthday Wish!!

Thursday,21st of June 2012
சென்னை::நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு விஜய் செல்கிறார். அங்கு நாளை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.
இதே ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நீலாங்கரையில் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் ரசிகர்களின் ரத்தான முகாம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாமும் நடக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார்.

வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தாமு தலைமையில் திருவான்மியூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

சின்மயாநகர் குழந்தை ஏசு கோவிலில் பூக்கடை குமார் தலைமையில் முதியோருக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

சைதாப்பேட்டையில் கார்த்திக் தலைமையில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது. கொருக்குப் பேட்டையில் ரசிகர் மன்ற நிர்வாகி விஜய் தலைமையில் ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் ஓட்டேரி நந்தா தலைமையிலும், கோடம்பாக்கத்தில் அப்புனு தலைமையிலும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

திருவேற்காட்டில் 1500 பேருக்கு மேற்கு சென்னை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் கருவாயன் தலைமையில் உணவு மற்றும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் கடம்பத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜயகுமார், கடம்பத்தூர் மணி ஆகியோர் 5 ஜோடிகளுக்கு 38 வகை சீர் வரிசை வழங்கி இலவச திருமணத்தை நடத்தி வைத்தனர்.

Comments