எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் இன்று காலை: விஸிட் :தள்ளுமுள்ளு... ரசிகர்கள், போலீசாருக்கு காயம்!
Friday, 22nd of June 2012
சென்னை::பிறந்த நாளையொட்டி இன்று இலவச மோதிரம் வழங்க வந்த நடிகர் விஜய்யைப் பார்க்க ஏராளமானோர் முண்டியடித்ததால் ரசிகர்கள் - போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் இன்று காலை விஜய் சென்றார். அங்கு இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார்.
இதே மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார் என்பதால் ஆண்டுதோறும் இந்த சென்டிமென்ட் பரிசை அவர் தருகிறார்.
காலை 10.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல்தான் விஜய் மருத்துவமனைக்கு வந்தார்.
அவரின் வருகைக்காக பொதுமக்களுடன் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் காத்திருந்தனர். மருத்துவர்களூம், மருத்துவமனை ஊழியர்களூம் வேலையை கவனிக்காமல் விஜய்யின் வருகைக்காக காத்திருந்ததால் சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அதைவிடக் கொடுமை, வலியில் துடித்த பிரசவம் ஆன தாய்மார்களை விஜய் வருகிறார் என்று கூறி படுக்கவிடாமல் 1 மணி நேரமாக உட்காரவைத்திருந்தனர். பிரசவம் ஆகி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணை, விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று ஸ்டெச்சரில் வைத்தே நெடு நேரத்திற்கு அலையவிட்டிருக்கிறார்கள்.
விஜய் வந்ததும் பொதுமக்களும், ஊழியர்களும் முட்டிமோதினர். இதனால் மருத்துவமனை கண்ணாடிகள் நொறுங்கின. இதில் சிக்கிய சில ரசிகர்கள் மற்றும் போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டன.
விஜய் பரிசளித்ததில் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், அந்த பரிசுக்காக நடந்த இந்த முட்டல் மோதல் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது பார்வையாளர்களுக்கு...
நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்று கேக் வெட்டினார். இந்த ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்பத்திரிக்கு வந்த விஜய்யை டாக்டர்கள், நர்சுகள், ரசிகர்கள் வரவேற்றனர். பிரசவ வார்டுக்கு சென்று இன்று காலையில் பிறந்த 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
பெற்றோரிடம் குழந்தைகளுக்கான பரிசு பொருட்களை வழங்கினார். கேக் வெட்டி டாக்டர்கள், நர்சுகளுக்கு ஊட்டி விட்டார். அங்கு குழுமியிருந்தவர்கள் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். நீண்ட நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment