வெளிப்படையாக பேசுவதால் பொல்லாதவள் பட்டம் -மீரா ஜாஸ்மின்!!!

Saturday, 30th of June 2012
சென்னை::ஒளிவு மறைவில்லாமல் பேசுவதால் பொல்லாதவள் என்கிறார்கள்` என வருத்தப்படுகிறார் மீரா ஜாஸ்மின்.
இது பற்றி அவர் கூறியதாவது:
படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருப்பது ஏன் என்கிறார்கள். ஏற்கனவே நடித்ததுபோன்ற வேடங்களிலேயே மீண்டும் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடித்து சம்பாதித்துதான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக என்னால் வரும் வேடங்களை எல்லாம் ஏற்க விருப்பமில்லை. மனதை கவரும் பாத்திரங்கள் எதுவும் சமீபகாலமாக வரவில்லை. எனவே நடிப்பி லிருந்து சில காலம் ஒதுங்கி இருக்க ஆசைப்பட்டேன். இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டேன். உலகில் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற நினைத்தேனோ அந்த நாடு களுக்கெல்லாம் சென்றுவந்தேன். பெரும்பாலும் சமைப்பதிலும், சினிமா பார்ப்பதிலும் என் நேரத்தை செலவழித்தேன். தற்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால்தான் மலையாளத்தில் பாபு ஜனார்த்தனன் இயக்கும் ‘லிஸ்சம்மாயுடே வீடுÕ என்ற படத்தை ஒப்புக்கொண்டேன். இதில் பள்ளி பருவம் தொடங்கி 55 வயது தோற்றம் வரையிலான கதாபாத்திரம். சவாலான வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத் தால்தான் அதிக படங்களை ஒப்புக்கொள்வேன். நான் எளிமையை விரும்புபவள். அதுவே எனக்கு நன்மையாகவும், தீமையாகவும் இருக்கிறது. மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் குணம் கொண்டிருப்பதால் என்னை பொல்லாதவள் என்றும் சிலர் கூறுகிறார்கள். எதையும் பிடித்தால் பிடிக்கிறது என்பேன். இல்லாவிட்டால் பிடிக்கவில்லை என்று கூறிவிடுவேன். அதுதான் என் குணம்.

Comments