கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday, June, 07, 2012
பசங்க பாண்டியராஜ் உதவியாளர் நவீன் இயக்கும் புதிய படத்துக்கு ஏற்கனவே 30 நாள் கால்ஷீட் தந்திருந்தார் ஓவியா. தற்போது மேலும் 10 நாள் கால்ஷீட்
தந்திருக்கிறார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த இமேஜின் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘உருமி’ படத்துக்கு சிறந்த பட விருது தரப்பட்டது.

‘நெஞ்சில் ஒரு முள்’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமான பூர்ணிமா பாக்யராஜ் தனது கடைசி படமான ‘உங்கள் வீட்டு பிள்ளை’ படத்துக்கு பிறகு கே.பாக்யராஜை மணந்துகொண்டு நடிப்பை விட்டு விலகினார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படம் மூலம் சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

சித்தார்த் நடிக்கும் ‘சஷ்மே பத்தூர்’ இந்தி படத்தில் ஜோடியாக நடிக்கிறார் டாப்ஸி.

கும்கி' படத்தில் அறிமுகமாகும் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு சமீபத்தில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காதல் கதைகளில் நடித்த ஜெய்க்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம்.

இளையராஜா, மணிரத்னம் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டுமென வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராஞ்சி மிருககாட்சி சாலையில் உள்ள சுந்தரி என்ற பெண் சிங்கத்தை ஒரு வருடத்துக்கு பரமாரிக்க பொறுப்பு ஏற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

யாவரும் நலம்' விக்ரம் குமார் தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சமந்தா.

‘நான் ராஜாவாகப்போகிறேன்' படத்தில் நகுல் ஜோடியாக நடிக்கிறார் சாந்தினி. இவர் பாக்யராஜின் ‘சித்து பிளஸ் 2' படத்தில் நடித்தவர்.

பஞ்சாபி, கன்னட படங்களில் நடித்த சுர்வீன் சாவ்லா இயக்குனர் வசந்த் இயக்கும் ‘மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சீனுராமசாமி இயக்கும் ‘நீர்பறவை' படத்தில் ஒர்க்ஷாப் நடத்தும் முஸ்லிம் இளைஞர் பாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி.

வழக்கமாக தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பும் விஜய், இம்முறை கன்னடத்தில் வெளியான ‘விஷ்ணுவர்த்தனா என்ற படத்தை பார்த்தாராம். ரீமேக் பண்ண இந்த கதை ஓகேன்னு சொல்லிட்டாராம். கால்ஷீட்டுக்கு வருஷ கணக்கில் காத்திருக்க இயக்குனரை சொல்லிட்டாராம்.

Comments