ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வசூலில் இறங்கிய ரசிகர்கள்: வேணாம் வேணாம்... எனக்கு கோயில் வேணாம்! - ஹன்ஸிகா!!!
Saturday, 16th of June 2012
சென்னை::ஹன்சிகாவுக்கு கோயில் கட்டுவதற்காக அவரது ரசிகர்கள் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கின்றனர். குஷ்புக்கு ரசிகர்கள் கோயில் கட்டியதுபோல் ஹன்சிகாவுக்கும் கோயில்கட்ட முடிவு செய்துள்ளனர். மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள ரசிகர்கள் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் கோயில் கட்டும் பணி தொடங்குகின்றனர். 2013ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திறப்பு விழா நடக்கிறது. ஹன்சிகாவையே நேரில் அழைத்துச் சென்று கோயிலை திறக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, ‘கடந்த சில மாதங்களுக்கு முன் என் ரசிகர்கள் சிலர் என்னை அணுகி எனக்கு கோயில் கட்ட உள்ளதாகவும் அதற்கு அனுமதி தரும்படியும் கேட்டனர். என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள் என்று எண்ணினேன். ஆனால் இது கொஞ்சம் ஓவர். கடவுளையும் மனிதனையும் சரிசமமாக பார்ப்பதை என்னால் ஏற்க முடியாது என்றார்...
குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி பாப்புலர் ஆன தமிழ் ரசிகமகாஜனங்கள், சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஹன்ஸிகாவுக்கும் கோயில் கட்டத் தயாராக நிற்கிறார்கள்.
இடமெல்லாம் பார்த்து, செங்கல், கருங்கல்லுக்குக் கூட ஆர்டர் கொடுத்துவிட்டதாக செய்தி வந்த நிலையில், 'வேணாம்... வேணாம் எனக்கு கோயில் கட்ட வேணாம்' என தெரிவித்துள்ளார் அம்மணி!
ஹன்சிகாவுக்கு மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.
இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன்.
ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்," என்றார்.

Comments
Post a Comment