
சென்னை::நடிகர், இயக்குநர் என இரட்டை குதிரையில் சவாரி செய்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தனது புதிய படமான 'இசை' படத்தின் மூலம் இசையமைப்பாளர் என்ற மூன்றாவது குதிரையிலும் சவாரி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
நடிப்பு, இயக்கம் மற்றும் இசை என்ற மூன்று துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திகொண்ட எஸ்.ஜே.சூர்யா, 'இசை' படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக நடத்தி வருகிறார். சினிமா சம்மந்தமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் நான்கு இயக்குநர்களை முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வைக்கப் போகிறாராம்.
அதில் ஒருவர் இயக்குநர் விஸ்வநாதன். மற்ற மூன்று இயக்குநர்களிடமும் தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு இந்தி நடிகை ஒருவரையும் ஆட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment