

சென்னை:கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்துக்கு பச்சைக் கலரில் விதவிதமாக விளம்பரங்கள் வெளியானதோடு சரி.
கவுதம் மேனன் தன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக, விஜய்யும் வேறு வேறு படங்களுக்காக தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் இந்தப் படம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கவுதம் மேனன் தன் இலக்கில் தெளிவாக இருந்து, விஜய்யைப் பிடித்துவிட்டார்.
வரும் ஜூலையிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என மீண்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
யோஹன் குறித்து அவர் கூறுகையில், "எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது உறுதி," என்றார்.
யோஹன் படம் தொடங்கும்போதே 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்கிறார் கவுதம் மேனன். பிரேம் சாய் என்ற புதிய இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்கிறார்கள். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் 'கூரியர் பாய் கல்யான்'!
Comments
Post a Comment