லெஸ்பியன் - சோனாவின் பளீர் பதில்!!!

Sunday 3rd of June 2012
இது லெஸ்பியன் சீஸன் போலிருக்கிறது. நமிதாவிடம் லெஸ்பியன் கேரக்ட‌‌ரில் நடிக்க ஒரு இயக்குனர் கேட்டதாகவும், அப்படியெல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று நமிதா அவரை திருப்பியனுப்பியதாகவும் சென்ற வாரம் செய்திகள் பரபரத்தன. அதன் சூட்டை மேலும் அதிக‌‌ரித்திருக்கிறார் சோனா.

நேற்று சோனாவின் பிறந்தநாள். விஷ் பண்ண வேண்டிய நிருபர்கள் வில்லங்கமான கேள்வி ஒன்றை கேட்டனர். நமிதா லெஸ்பியனாக நடிக்க மறுத்தார், நீங்க எப்படி?

நமிதாவுக்கும் சோனாவுக்கும் ஏற்கனவே அடிதடி. பார்க்காமலே பரஸ்பரம் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நமிதாவுக்கு உல்டாவாக சோனா பதில் சொல்வார் என நம்மாட்கள் நினைத்திருக்கலாம். ஆனால் சோனா சொன்ன பதில் வேறு மாதி‌ரி.

நான் பொம்பள சிங்கம், கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.

சே... என்ன சொதப்பலான பதில்.

Comments