ஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா!!!

Tuesday,12th of June 2012
சென்னை:அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

இது குறித்து சுராஜ் கூறுகையில்,

கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்கா ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்த ஒரு சோசிங் காட்சியை ரூ.2 கோடி செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளோம். படத்தில் இந்த காட்சி பேசப்படும் என்றார்.

Comments