சிம்புவுக்கு விரைவில் திருமணம் : டி.ராஜேந்தர் தகவல்!!!

Wednesday,13th of June 2012
காளஹஸ்தி::இயக்குனரும், நடிகருமான விஜய டி. ராஜேந்தர் நேற்று காளஹஸ்தி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் மனைவி உஷா, மகள் இலக்கியா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் ராகு கேது பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர், விஜய டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில், ‘''கதை, திரைக்கதை அமைத்து ''ஒருதலை காதல்'' என்ற படத்தை இயக்க உள்ளேன். இதில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்கிறேன். மகள் இலக்கியாவின் திருமணம் முடிந்ததும் விரைவில் சிலம்பரசன் திருமணம் நடைபெறும். எனது இளைய மகன் குறளரசன் நாயகனாக அறிமுகமாகும் படம் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

Comments