
சென்னை::நேற்று தனது புதிய படம் கௌரவத்தின் படப்பிடிப்பை முறைப்படி மைசூரில் தொடங்கினார் ராதாமோகன்.
பயணம் படத்துக்குப் பிறகு ராதாமோகன் இயக்கும் படம் இது. முதலில் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அல்லு அர்ஜுனின் இளைய தம்பி ஷ்ரிஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யமி கௌதம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான இந்திப் படம் விக்கி டோனரில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் தொடங்கியது. படத்தின் வசனத்தை மொழி படத்தின் வசனத்தை எழுதிய இயக்குனர் விஜய் எழுதுகிறார். ப்ரிதா ஒளிப்பதிவு, இசை எஸ்.எஸ்.தமன்.
பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.
Comments
Post a Comment