விண்ணைத்தாண்டி வருவாயாவை விட அதிக விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!!!

Tuesday,12th of June 2012
சென்னை:இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Comments