திருநங்கையாக நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் விவேக்!!!

Thursday,21st of June 2012
சென்னை::அண்மையில் சுந்தர் சி, சினேகா நடிப்பில் வெளியாகியுள்ள முரட்டுக் காளை படத்தில் திருநங்கையாக நடிகர் விவேக் நடித்திருப்பார். இக்கேரக்டரில் நடித்திருப்பது குறித்து நடிகர் விவேக் கூறியதாவது;

நம்ம சமுதாயத்துல திருநங்கைகளும் ஒரு அங்கம். அவங்க வேடத்தில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முரட்டுக் காளை படத்தில் அவங்களோட பிரச்சினைகளை சொல்லியிருப்பேன். இப்படத்தை பார்த்த திருநங்கைகள் பலரும் பாராட்டினர்.

கடந்த ஒரு வருடமாக தமிழகம் முழுவதும் மரம் நடுகின்ற நற்பணியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது அப்பணி முடிந்து விட்டது. புதிய உத்வேகத்துடன் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்.

கதை ஒன்று தயாராக இருக்கிறது. அப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். தயாரிப்பாளரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நானே அப்படத்தை இயக்க இருக்கிறேன்.

தற்போது வழிப்போக்கன், சந்திரா, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments