படங்களை குறைத்தது ஏன்? பியா பேட்டி!!!

Wednesday,20th of June 2012
சென்னை::வெற்றி படங்களில் நடித்தும் புதிய படங்கள் குறைந்தது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பியா. இதுபற்றி அவர் கூறியதாவது: இயக்குனர் கே.வி. ஆனந்தின் ‘கோÕ படத்தில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்காக அவருக்கு நன்றி. ஆனால் அடுத்தடுத்த படங்களிலும் அதேபோன்ற வேடங்களே என்னை தேடி வந்தது. அதை ஏற்கவில்லை. நல்ல வேடத்துக்காக காத்திருந்தேன். அதனால் படங்களை குறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் ‘தலம்Õ என்ற படத்தில் நவீன் ஜோடியாக நடிக்கிறேன். இரு படங்களிலும் பிராமண பெண் வேடம். ஜீவன் ரெட்டி இயக்குகிறார். ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல் கதையாக இருந்தாலும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ‘சட்டம் ஒரு இருட்டறைÕ படத்தில் நடிக்கிறீர்களா? என்கிறார்கள். அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது உண்மை. முதல்கட்ட ஷூட்டிங்கூட முடித்துவிட்டேன். இப்படத்திலிருந்து சில நடிகர்கள் வெளியேறிவிட்டது பற்றி கேட்கிறார்கள். அது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு பியா கூறினார்.

Comments