ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் நடிக்க கேட்டபோதே அவர் மீது சந்தேகம் இருந்தது என்றார் ஸ்ருதி ஹாசன். தனுஷ் நடித்த ‘3’ படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது நடிப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு விலகிவிட்டார். இந்நிலையில் மற்றொரு ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் நீக்கப்பட்டு ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி ஸ்ருதி ஹாசன் மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
‘3’ படத்தில் பணியாற்றும்போது தனுஷ், ஐஸ்வர்யா, நான் மூவருமே ஒருவரையொருவர் தொழில் ரீதியாக அணுகுவது என்ற முடிவு செய்துகொண்டோம். இதனால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை. தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம்.
எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன். இப்படத்தில் பள்ளி மாணவி, மனைவி, விதவை என 3 விதமான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை. கடந்த சில காலங்களுக்கு முன் இசையில் பிஸியாக இருந்தேன். இப்போது கேமராவுக்கு முன்னால் பிஸியாக இருக்கிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளியான ‘கப்பர் சிங்’ தெலுங்கு படம் வெற்றி பெற்றது சந்தோஷம். இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. ஆனால் இப்படம் வெற்றி அடைந்திருக்கிறது. சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம்.

Comments
Post a Comment