பிரபு மகன் விலகியதால் கார்த்திகா-ரீமா வெளியேற முடிவு

Friday, June, ,08, 2012
எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலிருந்து பிரபு மகன் விலகியதால் ஜோடியாக நடிக்கவிருந்த கார்த்திகா-ரீமாவும் விலக முடிவு செய்துள்ளனர். 1980களில் வெளியான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. எஸ்.ஏ.சந்திர சேகரன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தை தற்போது ரீமேக் செய்து தயாரிக்கிறார் நடிகர் விஜய். விஜயகாந்த் ஏற்று நடித்த வேடத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா மற்றும் முக்கிய வேடத்தில் ரீமா சென் நடிக்கவிருந்தனர்.

விக்ரம் நடித்த சில காட்சிகளும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது. ஹீரோ விக்ரம் பிரபு திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய ஹீரோவை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திர சேகரன் முடிவு செய்துள்ளார். இந்த திடீர் மாற்றத்தால் கார்த்திகா, ரீமா அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ளும் கார்த்திகா முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போடுகிறார். இந்நிலையில் புதிய ஹீரோவுடன் நடிக்க தயக்கம் காட்டுகிறார். இதையடுத்து படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதேபோல் ரீமா சென்னும் விலகுவார் என்று தெரிகிறது.

Comments