நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பேன் -ஐஸ்வர்யாராய்!!!

Saturday, 23rd of June 2012
மும்பை::ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்றபின் குண்டாகி இருக்கிறார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டி வருமாறு:-

குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.

வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

தாய் ஆனபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

பெண்களுக்கு நான் சொல்வதெல்லாம் மனஅழுத்தம் இன்றி சுதந்திரமாக இருங்கள். மனதை வருத்தும் விஷயங்களை பற்றி சிந்திக்காதீர்கள். குடும்பம் முக்கியம். அவர்களுக்காக வாழுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை இருக்கும்.

என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

Comments