

சென்னை:தமிழ் சினிமா கதாநாயகிகளில் இப்போது உற்சாகத்தின் உச்சியில் இருப்பவர் ஆன்ட்ரியாதான்.
காரணம்...? விரைவில் ஹாலிவுட் நாயகனாகப் போகும் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக விஸ்வரூபத்தில் நடித்திருப்பதுதானாம்.
தன் அனுபவத்தை இப்படி பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறார் ஆன்ட்ரியா.
"கமல் சார் ஒரு லெஜன்ட். ஒரு இயக்குநராக, நடிகராக, எழுத்தாளராக அவரை அப்படி ரசிப்பவள் நான். அவருடன் பணியாற்றும் அனுபவம் வாய்த்தபோது, உற்சாகத்தில் மிதந்தேன்.
அமெரிக்காவில் குளிர்காலத்தில் அவருடன் வேலைப் பார்க்கும் சூழல். கமலுடன் மட்டுமல்ல, அமெரிக்காவில் படப்பிடிப்பில் நான் பங்கேற்பதும் அதுதான் முதல்முறை. அங்கேயே கிறிஸ்துமஸ் தினத்தையும் கொண்டாடினேன். கமல்சார் அருகில் இருக்க, இத்தனை இனிமைகளையும் அனுபவித்தது மறக்க முடியாத நாட்களாக அமைந்துவிட்டது.
இந்தப் படத்தின் இந்தி வடிவத்துக்கும் என்னையே குரல் கொடுக்கச் சொல்லிவிட்டார் கமல் சார். அது என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது மட்டுமல்ல, என் திறமை மீது எனக்கே புதிய நம்பிக்கையை வரவழைத்துள்ளது," என்கிறார்.
விஸ்வரூபம் வெளியான பிறகாவது இந்த 'புராணம்' நிற்குமா... தெரியவில்லை!
Comments
Post a Comment