சிம்புவின் லவ் பண்ணலாமா வேண்டாமா...!!!

Wednesday,13th of June 2012
சென்னை::லூசு பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான்... பாடல்கள் வரிசையில் சிம்பு அடுத்து எழுதியிருக்கும் பாடல் லவ் பண்ணலாமா வேண்டாமா...! போடா போடி ‌படத்திற்காகத்தான் இப்படி ஒரு பாடலை எழுதியுள்ளார் சிம்பு. அதுவும் வெறும் 20 நிமிடத்திலேயே இப்பாட்டை எழுதிவிட்டாராம்.

இதுகுறித்து சிம்பு கூறியுள்ளதாவது, எனது முந்தைய பாடல்களை காட்டிலும் லவ் பண்ணலாமா வேண்டாமா பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என நம்புகிறேன். இப்பாட்டை எழுத எனக்கு சில நிமிடங்கள் தான் ஆனது. பாட்டுக்கு ஏற்ற இசையையும் தரண் அருமையாக அமைத்துள்ளார். பாட்டும் நன்றாக வந்துள்ளது. இந்தப்பாட்டை மட்டும் முதலில் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் இந்தப்பாடல் அனைவரையும் கவரும் என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வரும் போடா போடி படத்தில் சிம்பு ‌ஜோடியாக வரலெட்சுமி நடித்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தாண்டில் நிச்சயம் வெளியாகும் என நம்பப்படுகிறது

Comments