Tuesday,12th of June 2012
மும்பை:சினிமாவில் தீபிகாவைபற்றி கிசுகிசு அதிகம் வருகிறது. அவரைப்போல் நடிக்க வரமாட்டேன்’ என்றார் தீபிகா தங்கை அனிஷா தீபிகா. பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கிறார். இவரைப்பற்றி அடிக்கடி பாலிவுட் நடிகர்களுடன் தொடர்புபடுத்தி காதல் கிசுகிசு வருகிறது. தீபிகாவின் தங்கை அனிஷா படுகோன். இந்தியாவில் கோல்ப் விளையாட்டு வீரர்களில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார். அவரை சினிமாவில் நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து அனிஷா படுகோன் கூறியதாவது: பெங்களூரில் விரைவில் நடக்க உள்ள கோல்ப் விளையாட்டுக்காக தயாராகி வருகிறேன். பிறகு ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறேன். விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்துகிறேன். சினிமா பக்கம் என் கவனம் திரும்பாது. தீபிகா பிரபல நடிகை என்றாலும் எனக்கு நல்ல அக்காவாகத் தான் இப்போதும் இருக்கிறார். என்றைக்கும் அவரை நடிகையாக நான் பார்ப்பதில்லை. ‘என்னுடைய விளையாட்டை பார்க்க தீபிகா வந்திருக்கிறாரா?’ என்கிறார்கள். அவர் சினிமாவில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. அவரை தொந்தரவு செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.
வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் வருவார், நடிகர்களுடன் தீபிகாவை இணைத்து கிசுகிசு வருவதுபற்றி கேட்கிறார்கள். சினிமா துறையில் இதுபோல் காதல் கிசுகிசு தன்னாலேயே கிளம்புகிறது. ஒருவருடன் ஒருவரை இணைத்து பேசுவது என்பது சினிமா துறையில் ஒரு அங்கமாகிவிட்டது. இதை தவிர்க்க முடியாது. அதுபோல்தான் தீபிகா பற்றிய கிசுகிசுவும். இது எங்களை பாதிக்காது. என்னைப் பொறுத்தவரை கோல்ப் விளையாட்டில் சாதிக்க விரும்புகிறேன். நடிக்க வரும் எண்ணமில்லை. இவ்வாறு அனிஷா படுகோன் கூறினார்.

Comments
Post a Comment