
சென்னை::இனி வரும் நாட்களில் புதுப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. முதலில் சகுனி. அடுத்து பில்லா 2. அதற்கடுத்து துப்பாக்கி, முகமூடி, மாற்றான், தாண்டவம், விஸ்வரூபம் என பல படங்கள் உள்ளன. முதலில் முகமூடி வெளியாகிறது.
மிஷ்கின் இயக்கியிருக்கும் தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமான முகமூடி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியாகிறது. ஜீவா, நரேன் நடித்திருக்கும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் 20 நாட்கள் ஷூட் செய்தனர். யு டிவி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்கள். சென்ற வருடம் இதே தேதியில் வெளியான படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment