தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!

Wednesday,20th of June 2012
சென்னை::நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார்.

புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.

Comments