
தல அஜீத் குமார் ஓய்வு நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் தங்களுக்கு ஓய்வு கிடைத்தால் ரெஸ்ட் எடுக்க குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு புதுப்பொழிவுடன் நாடு திரும்பி மீண்டும் ஷூட்டிங் செல்வார்கள். ஆனால் அஜீத் குமார் சற்றே வித்தியாசமானவராக உள்ளார்.
அவர் தனக்கு ஓய்வு கிடைத்தால் உடனே வெளிநாடுகளுக்கு பறப்பதில்லை. மாறாக மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறார். மேலும் சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவர் ஓய்வெடுக்க வெளிநாடு செல்லாவிட்டாலும் தனது குடும்பத்தாரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 31ம் தேதி துவங்கிய இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment