
சென்னை::பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் நயன்தாரா. பல பட வாய்ப்புகள் அவரிடம் வந்து சென்றன. கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் என்ற படத்தில் சீதையாக நடித்தார். இதற்கிடையே பிரபுதேவா-நயன்தாரா காதலில் திடீரென முறிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் படம் நடிக்க முடிவு செய்த நயன்தாராவுக்கு, தெலுங்கில் ஒரு படம் அமைந்தது. தொடர்ந்து தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் கையில் வைத்துள்ளார். இதனால் மீண்டும் நம்பர்-1 நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் அவருக்கு "தி டர்ட்டி பிக்சர்ஸ்" தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்ததுடன், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதனை ஒரே செக்காகவும் கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். ஆனால் நயன்தாராவோ அந்த வேடத்தில் நடிக்க முடியாது சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் கேட்ட போது, சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்றுள்ளார்.
Comments
Post a Comment