சினிமாவைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கிவைத்துவிட்டேன் - ஐஸ்வர்யா ராய்!!!

Monday, 18th of June 2012
சென்னை::இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை. சினிமா பற்றி சிந்தனையையே ஒதுக்கி வைத்துவிட்டேன், என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

தற்போது 38 வயதாகும் ஐஸ்வர்யாராய், குழந்தை மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் லண்டன் சென்றுள்ளார். இந்திய வம்சாவழி இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் லண்டன் சென்ற அவர், அங்கு அளித்த பேட்டி:

"ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதில் ஆனந்தம் அடைகிறேன். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. சினிமாவை பற்றிய சிந்தனையே இப்போது எனக்கு இல்லை.

எனது வாழ்க்கையில் சிறப்பான தினம் எது என்றால், அது அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நாள்தான். எங்களுக்குள் உள்ள உறவு இயல்பானது. நாளுக்கு நாள் அந்த உறவு மேலும் அர்த்தமுள்ளதாக மாறிவருகிறது," என்றார்.

ஐஸ்வர்யா ராயுடனிருந்த அபிஷேக்பச்சன் கூறுகையில், "உடனிருந்து என்னால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும் ஐஸ்வர்யாதான் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் என்பக்கம் தவறு இருக்கிறது. காரணம் கேரியர்!," என்றார்.

Comments