
சென்னை::உனக்கும் எனக்கும் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், தரிஷாவும் இணையும் படம் பூலோகம். கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தில் த்ரிஷாவுக்கு ரொம்ப வலுவான கேரக்டராம். எந்தளவுக்கு என்றால் பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் பலமே த்ரிஷா தானாம்.
இதுகுறித்து த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment