
சென்னை::போபாலில் விஷவாயு வெளியேறி மக்களை பலிவாங்கிய யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நகுல், சாந்தினி ஷூட்டிங் நடக்கிறது. அர்ஜுன், சுந்தர்.சி. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிருத்வி ராஜ்குமார் இயக்கும் படம் ‘நான் ராஜாவாகப் போகிறேன்Õ. அவர் கூறியதாவது: ஐ.டி ஆபீசில் வேலை பார்ப்பவருக்கும், சட்ட கல்லூரி மாணவிக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் சமூக பிரச்னை ஒன்று குறுக்கிடுகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுடன் சுற்றுப்புற சூழல் பாதிப்பு பற்றியும் உள்ளடக்கிய கதை. ஆக்ஷன், த்ரில்லர், லவ் மூன்று அம்சங்கள் கொண்ட ஸ்கிரிப்ட். நகுல் ஹீரோ. சாந்தினி ஹீரோயின். நிஷாந்த், கவுரவ், ஏ.வெங்கடேஷ், கஸ்தூரி, அவனி மோடி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் நடிக்கின்றனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ் இசை. வெற்றி மாறன் வசனம்.
கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் டெல்லி, போபால், மணாலி போன்ற இடங்களில் நடந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் போபாலில் விஷவாயு தாக்கி ஏராளமானவர்கள் இறந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்னும் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்க்கை நிலவரத்துடன் விஷவாயு தாக்கிய யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு பிருத்வி ராஜ்குமார் கூறினார்.
Comments
Post a Comment