Thursday,14th of June 2012
சென்னை::கமல் படம் என்றால் நடிப்பு, மேக்கப் மற்றும் முத்தம் ஆகியவைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசனுக்கும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமாருக்கும் இடையே முத்தக் காட்சி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு வேறு கமல் போகப் போவதால் படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் குஜாலாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் படத்தின் நாயகி பூஜா குமார் தனது தமிழ் மறு வருகை குறித்தும், கமல் குறித்தும் புளகாங்கிதப்பட்டுப் பேசியுள்ளார். இவர் ஏற்கனவே 2000மாவது ஆண்டு வந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தவர். அத்தோடு நடிப்பிலிருந்து விலகிப் போனவர். இப்போது கமல்ஹாசன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
இதுகுறித்துக் கூறிய பூஜா, இந்தப் படம் நானாக திட்டமிட்டதில்லை. கமல் சார்தான் என்னை திடீரென கூப்பிட்டுப் பேசினார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. எனக்கு அறிமுகம் கொடுத்த சென்னைக்கும், தமிழ் சினிமாவுக்கும் நான் செய்துள்ள பிரதிபலனாகவே இப்படத்தை கருதுகிறேன் என்றார்.
சரி, கமல் படம் என்றாலே முத்தம் இல்லாமல் இருக்காது. இப்படத்தில் எப்படி என்று கேட்டால், அப்படியா, எனக்குத் தெரிந்து இப்படத்தில் முத்தக்காட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லையே என்று சிரித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஆனால் நான் வேறு ஒரு படத்தில் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளேன் என்று கூறி நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தார்.
அடடா, வடை போச்சே கமல்ஜி...!

Comments
Post a Comment