Wednesday, June, 06, 2012
திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார்.
பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.
இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.
கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Comments
Post a Comment