கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Friday, 15th of June 2012
சென்னை::* ‘காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னா ராஜ், மலையாள படங்களையடுத்து தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘லக்கி என்ற படம் மூலம் புதுமுக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அறிமுகமாகிறார்.

* ‘அரண் பட இயக்குனர் மேஜர் ரவி இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வந்த ‘மெய்காண் படம் பைனான்ஸ் பிரச்னையால் 2 வருடமாக தடைபட்டிருக்கிறது. மீண்டும் 2 மாதத்துக்குள் புதிய வேகத்துடன் படத்தை தொடரவுள்ளாராம் மேஜர் ரவி.

* ‘ஆடுகளம் கிஷோர் மலையாள நடிகர் ஜெயராமின் தீவிர ரசிகர். அவருடன் இணைந்து நடிக்கும்போது தனக்கு காட்சி இல்லாவிட்டாலும் அங்கேயே நின்று ஜெயராம் அடிக்கும் ஜோக்கை ரசிப்பாராம்.

* பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறை இயக்க திட்டமிட்டிருக்கிறார் ராஜீவ் மேனன்.

* ‘தி டர்ட்டி பிக்சர் பட ஹீரோயின் வித்யாபாலன் சேலை விளம்பரங்களில் நடிக்க ஒன்றே கால் கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

* சேட்டை படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் ஆர்யா கேரக்டருக்கு ஜெயகாந்தன் என பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

* ‘அவன் இவன் படத்தில் தனது நடிப்பை வெளிப்பட வைத்த பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் விஷால். அதற்கு முன் திரு இயக்கத்தில் நடித்து வரும் சமர், சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘மதகஜ ராஜா படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

* வினய் நடிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கும் ‘மிரட்டல், தெலுங்கில் வெளியான ‘தீ படத்தின் ரீமேக்.

* லண்டனில் பெய்யும் கடும் மழையால் ‘தாண்டவம் பட குழுவினர் பாதித்துள்ளனர் என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Comments