Saturday, 23rd of June 2012
சென்னை::ஹீரோவை பிடித்தால்தான் படங்களை ஏற்பேன் என்றார் சார்மி. இதுபற்றி அவர் கூறியதாவது: மம்முட்டியுடன் ‘தப்பன்னா’ மலையாள படத்தில் மல்லிகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அமைதியான அதேநேரத்தில் உறுதியான மனம் படைத்த கேரக்டர். அந்த வேடத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறேன். அவர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் எல்லோருடனும் சகஜமாக பழகினார். ‘சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘புரொபைல்’ என்ற படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?’ என்று கேட்கிறார்கள். அப்படத்தில் பல காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஒரு ஹீரோயின் என்றால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக இதுபோன்ற வேடங்களை ஏற்க விரும்பவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. அடுத்து இந்தியில் ‘ஜில்லா காசியபாத்’ படத்தில் நடிக்கிறேன். விவேக் ஓபராய் ஹீரோ. என்னுடைய உடை மற்றும் பேச்சு வழக்கு எல்லாமே காஸியாபாத் பகுதியை சேர்ந்த பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் ‘சேவகுடு’ என்ற படம் விரைவில் வரவிருக்கிறது. மீண்டும் மலையாளத்தில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எந்த படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பும் தயாரிப்பாளர், உடன் நடிக்கும் ஹீரோ, எனது வேடம் என மூன்று அம்சமும் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாக ஏற்க மாட்டேன். குறிப்பிட்ட வேடம் என்னை கவர வேண்டும். பேசும்படி இருக்க வேண்டும்.

Comments
Post a Comment