Wednesday,27th of June 2012
சென்னை::சினேகா, கிஷோர் நடிக்க 'ஹரிதாஸ்' என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. குமரவேலு இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்தது.
நேற்று தனுஷ்கோடி அருகே கடலில் தீவு போல் உள்ள சிறிய மணல் மேட்டில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதற்காக சினேகா, கிஷோர், இயக்குனர் குமரவேலு, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்டோர் படகில் மணல் தீவுக்கு சென்றனர். அங்கு கிஷோர், சினேகா பாடல் காட்சியை படமாக்கி விட்டு அனைவரும் படகில் கரைக்கு திரும்பினர்.
சினேகா தனியாக ஒரு படகிலும் கிஷோர், குமரவேல், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு போன்றோர் இன்னொரு படகிலும் வந்தனர். அப்போது பெரிய அலையொன்று கிஷோர் வந்த படகில் மோதியது. இதில் படகு தள்ளாடி குப்புற கவிழ்ந்தது. அனைவரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினார்கள். இதை கண்ட மீனவர்கள் விரைந்து சென்று காப்பாற்றினார்கள்.
விபத்து குறித்து இயக்குனர் குமரவேலு கூறியதாவது:-
அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம். படகு கவிழ்ந்ததும் கிஷோரும், ரத்தின வேலும் நீச்சல் அடித்தப்படி தத்தளித்தனர். எனக்கு நீச்சல் தெரியாது. நான் படகை பிடித்தப்படி தொங்கினேன்.
படத்தில் நடிக்கும் சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன்.மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சினேகா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment