தமிழ் கதைகள் போரடிக்கிறது - அசின்!!!

Thursday, 28th of June 2012
மும்பை::தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார் அசின்.

இதுபற்றி அசின் கூறியதாவது:-

பாலிவுட்டில் ‘ஹவுஸ்புல் 2’ படம் ரசிகர்களுக்கு திருப்தி தந்தது. விமர்சகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். சமீபமாக நடித்த சில படங்கள் காமெடி கதைகளாக அமைந்தது. இது தானாக அமைந்தது. அடுத்து ‘கில்லாடி 786’ படத்தில் நடிக்கிறேன், இதன் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்திருக்கிறது. ‘ஹவுஸ்புல் 2’க்கு பிறகு மீண்டும் அக்ஷய்யுடன் இணைகிறேன். ‘தமிழ் உள்பட தென்னிந்திய படங் களை ஒப்புக்கொள்ளாதது ஏன்?’ என்கிறார்கள். சமீபகாலமாக என்னிடம் சொல்லப்பட்டவை போரடிக்கும் கதைகளும், ஏற்கனவே நான் நடித்த கேரக்டர்களும்தான். அதனால்தான் ஏற்கவில்லை. நடித்த வேடங்களிலேயே மீண்டும் நடிக்க விருப்பமில்லை. நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் தவிர்க்க மாட்டேன். இந்தியில் ரீமேக் ஆகும் ‘வேட்டை’ படத் தில் சாஹித் கபூர் நடிப்பதால்தான் நான் நடிக்க மறுத்துவிட்டேனா என்கிறார்கள். அதுபற்றி கருத்துகூற விரும்பவில்லை. மேலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்போட என்னால் முடியாது. எனக்கு நன்கு ஆடத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் யாரும் என்னை குத்தாட்டம் ஆட அழைத்ததில்லை. அப்படி ஆடுவதை தகுதி குறைவாக நினைக்கிறேன்.

Comments