
சென்னை::மலையாளப் படத்துக்காக பைக் ஓட்ட கற்றுவருகிறார் பூஜா காந்தி.
தமிழில் ‘கொக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா காந்தி. பின்னர் ‘தலையெழுத்து’, ‘திருவண்ணாமலை’ படங்களில் நடித்த இவர், தன் பெயரை பூஜா காந்தி என்று மாற்றிக்கொண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார். இப்போது ரேவதி வர்மா இயக்கும் ‘மாட் டாட்’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது:
இந்தப் படத்தில் பத்மப்ரியா, மேக்னா ராஜ், லால் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் பைக் ரேஸ் லிசாவாக நான் நடிக்கிறேன். இதற்காக அதிக எடை கொண்ட பைக்கை ஓட்டி பழகி வருகிறேன். சில நேரங்களில் தடுமாற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தில் எனக்கு சவாலாக இருந்தது டயலாக். நான்கு பக்க வசனத்தை பேச வேண்டியிருந்தது. மலையாளம் தெரியாது என்றாலும் மனப்பாடம் செய்து பேசினேன். சில உச்சரிப்புகள் தவறாக இருந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு குழந்தையை போல மனப்பாடம் செய்தது புது அனுபவமாக இருந்தது.
Comments
Post a Comment