
சென்னை::பரத்தை வைத்து படம் எடுக்கிறேன், இசையமைப்பாளரும் நானே என்று ரொம்ப நாளாகச் சொல்லிக் கொண்டிருந்தார் பேரரசு. நடுவில் விஜய்க்கு கதை சொன்னதாகவும் பேச்சு எழுந்தது. பரத்தும் சரி, விஜய்யும் சரி இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
பேரரசு விரைவில் மம்முட்டியை இயக்குகிறார். கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். அதுவும் மலையாளத்தில் என்பது கூடுதல் அதிர்ச்சி.
பல வருடங்கள் முன்பு மம்முட்டி நடித்த சாம்ராஜ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். சன் ஆஃப் அலெக்ஸாண்டர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை பேரரசு மலையாளத்தில் இயக்குகிறார். மலையாளிகளுக்கு இப்போது பேரரசு போன்றவர்களின் மசாலா தேவைப்படுகிறது போல.
இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
Comments
Post a Comment