Tuesday, 26th of June 2012
சென்னை::சென்னை :தனது அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு வீடுவாங்கித் தந்துள்ளார் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்து வரும் பிரகாஷ்ராஜ், இப்போது இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடிக்கிறார். கால்ஷீட் பிரச்னை, சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வராமல் போவது, ஒப்புக்கொண்ட படத்திலிருந்து திடீரென நடிக்காமல் விலகுவது என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர் பிரகாஷ்ராஜ். படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர் தனது அலுவலக ஊழியர்களுக்கு ஹீரோவாகியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் ஐதராபாத்திலுள்ள தனது அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு வீடு வாங்கித் தந்தார். இப்போது மீண்டும் தனது அலுவலகத்தை சேர்ந்த 4 ஊழியர்களுக்கு தலா ஒரு வீடு விதம், 2 பெட்ரூம், ஹால், கிச்சன் வசதியுடன் கூடிய 4 வீடுகளை ஐதராபாத்தில் வாங்கித் தந்துள்ளார். பிரகாஷ்ராஜ¢ கதை கேட்க, படங்களை தயாரிப்பது தொடர்பான வேலைகளில் ஈடுபட ஐதராபாத்தில் அலுவலகம் உள்ளது. இங்கு பல ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் 4 பேர் தவித்தனர். இது பற்றி கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ், உடனே ஐதராபாத்திலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் அவர்களுக்கு வீடுகள் வாங்கித் தந்துள்ளார்.

Comments
Post a Comment