Tuesday, 19th of June 2012
சென்னை::கவுதம் மேனன் - சூர்யா கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது. இந்த முறை அவர்கள் இணையும் படத்துக்கு துப்பறியும் ஆனந்தன் என பெயரிடப்பட்டுள்ளது.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் என கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் வந்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தை கவும் மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கவுதம் மேனன் இயக்கும் யோஹன் முடிந்ததும், இந்தப் படம் தொடங்குகிறது.
இந்தப் படம் குறித்து சூர்யா கூறுகையில், "நானும் கவுதம் மேனனும் இணைந்தாலே ரொமான்ஸ், நல்ல பாடல்கள், அதிரடி ஆக்ஷன் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு கூடிவிடுகிறது. துப்பறியும் ஆனந்தன் இவையெல்லாவற்றுடன், இதுவரை தமிழில் பார்க்காத வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும்," என்றார்.
கவுதம் மேனன் கூறுகையில், "துப்பறியும் ஆனந்தன் படத்தில் சூர்யா என்னுடன் இணைவதில் பெரிய மகிழ்ச்சி. ரொம்ப ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. 2013-ல் தொடங்குகிறது," என்றார்.
துப்பறியும் ஆனந்தன் என்ற தலைப்பு, அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்கு வைப்பதாக இருந்து. கவுதம் -அஜீத் கூட்டணி உடைந்துவிட்டதால், அந்தக் கதையும் தலைப்பும் இப்போது சூர்யாவுக்குப் போயிருக்கிறது!

Comments
Post a Comment