மீண்டும் தயாரிப்பாளராகும் ஆர்யா!!!

Monday, 11th of June 2012
சென்னை::படம் இயக்குவதில் ஒரு சுகம் இருக்கிறது. படம் நடிப்பது அலாதியான சுகம். ஆனால் தயாரிப்பு? அதுவும் படித்துறை என்ற படத்தை தயாரித்து பாதியில் அம்போவென கைவிட்ட ஆர்யாவுக்கு?

மீண்டும் படம் தயாரிக்கும் முஸ்தீபுகளில் இருக்கிறாராம். இந்தமுறை சேப்டியாக மேலும் இரண்டு பேருடன் களம் இறங்குகிறார்.

சேட்டை படத்தில் நடித்துவருகிறவர் அடுத்து நடிக்கும் படத்தை விஜய் டிவி மகேந்திரன் மற்றும் ஆடிட்டர் சண்முகம் இருவருடன் இணைந்து தயாரிக்கும் முடிவில் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஷங்கரின் அசிஸ்டெண்ட் இயக்குவார் என்பது உதிரித் தகவல்.

விரைவில் படத்தைக் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாக உள்ளது.

Comments