Monday, 11th of June 2012
சென்னை::அமலாபால், இயக்குனர் விஜய் இடையே காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். விஜய் மதராச பட்டினம் படத்தை இயக்கி பிரபலமானார். விக்ரமை வைத்து தெய்வத் திருமகள் படத்தை டைரக்டு செய்தபோது அதில் அமலாபாலை நடிக்க வைத்தார்.
அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. படம் ரிலீசான பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்தது. அமலா பாலுக்கு வீடு வாங்கி கொடுத்து குடியமர்த்தி இருப்பதாக விஜய் பற்றி கிசு கிசுக்கள் வந்தன. விஜய்யின் அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளிலும் அமலா பால் பங்கேற்றார். இருவரது காதலையும் பெற்றோர் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான் அவர்களுக்குள் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அமலா பால் சமீபத்தில் ராம்சரணுடன் நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். விஜய்யும் விக்ரம் நடிக்கும் தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ளார். அப்போது அமலா பாலுடன் விஜய் செல்போனில் பேச முயன்றபோது அமலாபால் பேச மறுத்துவிட்டாராம். இதையடுத்து விஜய்யும் தொடர்பை முறித்து விட்டாராம். அவருக்கு வேறு இடத்தில் பெற்றோர் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

Comments
Post a Comment