Thursday,21st of June 2012
சென்னை::கடல் படத்துக்கு, சமந்தா நடித்த காட்சிகளுக்கு பதிலாக புதிய காட்சிளை ரீ ஷூட்டிங் நடத்துகிறார் மணிரத்னம். ‘கடல்Õ படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தின் தொடக்கம் முதலே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. கார்த்திக் மகன் கவுதம் ராம் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர், பெப்சிக்கு இடையே ஏற்பட்ட சம்பள பிரச்னை காரணமாக நடந்த ஸ்டிரைக்கால் இதன் ஷூட்டிங் தொடக்க நிலையிலேயே பாதிப்புக்குள்ளானது. பின்னர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. ஹீரோயினாக பாலிவுட் ஹீரோ அனில்கபூரின் மகள் சோனம் கபூரை நடிக்க தேர்வு செய்தார் மணிரத்னம். அவரை வைத்து போட்டோ ஷூட் நடத்தினார். இதில் திருப்தி இல்லை எனக்கூறி நீக்கிவிட்டார். பிறகு சமந்தாவை ஒப்பந்தம் செய்தார். முதல்கட்ட ஷூட்டிங் முடித்தபிறகு காட்சிகளை திரையிட்டு பார்த்தபோது கவுதம், சமந்தா ஜோடி பொருத்தம் சரி இல்லை என்று எண்ணினார். இதையடுத்து சமந்தாவை படத்திலிருந்து நீக்கிவிட்டு ராதா மகள் துளசியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட காட்சிகளை ரீ ஷூட் செய்கிறார். சமந்தா காட்சிகளை நீக்கிவிட்டு துளசி நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறார். மேலும் இப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள் மீடியாவில் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து பட குழுவினர் யாரும் மீடியாவிடம் பேசக்கூடாது என்று மணிரத்னம் தடை போட்டிருக்கிறார். அதேபோல் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கார்த்திக், ராதாவுக்கும் தமது வாரிசுகள் நடிக்க வந்தது பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம் மணிரத்னம்.

Comments
Post a Comment