நீங்க சிவாஜி, உங்க அண்ணன் எம்ஜிஆராமே... - நிருபரின் கேள்வியால் பதறிய கார்த்தி!!!

Tuesday, ,June,05, 2012
கார்த்தியின் சகுனி பட ஆடியோ வெளியீட்டை பெரிய அளவில் நடத்தினர். சத்யம் சினிமாஸில் நடந்த இந்த இசை வெளியீட்டுக்கு திரளான கூட்டம் வந்திருந்தது. எக்கச்சக்க கார்த்தி ரசிகர்கள் வேறு.

படத்தின் போஸ்டர்கள், பேனர்களில் அரசியல்வாதி ரேஞ்சுக்கு கைகளை தலைக்கு மேல் கும்பிடு போட்டபடி போஸ் கொடுத்துள்ளார் கார்த்தி. ரசிகர்கள் உற்சாகமாக அவரையும் தலைவராக்கிக் கொண்டிருந்தனர்.

ஆடியோ ரிலீசுக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் திடீரென அந்த கேள்வியைக் கேட்டார்.

ஆமா கார்த்தி... தமிழ் சினிமாவுல நீங்கதான் சிவாஜியாம்... உங்க அண்ணன் எம்ஜிராமே... நிஜமாவா? என்று கேட்டார்.

அதிர்ந்த கார்த்தி, 'அய்யய்யோ.... ஆளை விடுங்க சாமி. இந்த ஆட்டத்துக்கே நான் வரல. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இது தவறான கம்பேரிசனும்கூட', என்றார்.

Comments