குழந்தைகளுக்கான படம் இயக்க தயாராகும் ஐஸ்வர்யா!!!

Friday, 29th of June 2012
சென்னை::படத்தின் மூலம் இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ், தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த முறை குழந்தைகளுக்கான படத்தை இயக்கப் போகிறாராம்.

இந்தப் படத்திற்காக குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஐஸ்வர்யா, "நான் மீண்டும் இயக்கப் போகிறேன். நான் இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களுக்கு பொருத்தமான கதை. மற்றொன்று குழந்தைகளுக்கானது. இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் குழந்தைகளுக்கான படத்திற்கான குழந்தை நட்சத்திரங்களை தற்போது தேர்வு செய்து வருகிறேன்." என்று கூறினார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இந்த படத்தையும் அவரது சொந்த நிறுவனமே தயாரிக்குமாம்

Comments