
சென்னை::படமே ரிலீசாகவில்லை... அதற்குள் விஜய்யின் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கு ஏக போட்டி.
காரணம், படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்தான்.
இவர் ஏற்கெனவே தமிழில் ஹிட்டடித்த தன் கஜினி படத்தை இந்திக்கு கொண்டு சென்றார். அமீர்கானை வைத்து, அதே தலைப்பில் இயக்கி பெரிய வெற்றிப் படமாக்கினார்.
இப்போது விஜய்யை வைத்து எடுக்கும் துப்பாக்கி, கஜினியை விட பலவகையிலும் மேம்பட்ட படைப்பாக வரும் என்று முருகதாஸ் கூறி வருகிறார்.
எனவே இந்தப் படத்தை இந்தியில் அப்படியே ரீமேக் செய்து கொடுத்துவிடுங்கள் என முருகதாஸை நிரப்பந்திக்க ஆரம்பித்துவிட்டார்களாம் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் - தயாரிப்பாளர்கள்.
இதைத் தொடர்ந்து துப்பாக்கி ரீமேக் வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் முருகதாஸ் என்கிறார்கள்.
விஜய் வேடத்தில் இந்தியில் நடிக்கவிருப்பவர் அக்ஷய் குமார்!
Comments
Post a Comment