எடுக்காமல் விடப்பட்ட அஜித் படத்தில் சூர்யா!!!

Thursday,14th of June 2012
சென்னை::சென்ற வருடத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட கௌதம், அஜீத் காம்பினேஷன் நினைவிருக்கிறதா? துப்பறியும் ஆனந்த் என்ற கௌதம் படத்தில் அஜீத் நடிப்பதாகவும், கௌதம் கதை சொல்லாமல் இழுத்தடித்ததால் அஜீத் கோபித்து படத்திலிருந்து வெளியேறியதாகவும், காத்திருக்க அஜீத் என்ன கமலா, சூர்யாவா என்று கௌதம் சீறியதாகவும்.... ஓகே நினைவு வந்துவிட்டதா?

அந்த எடுக்காமலேப் போன அஜீத் படத்தில் இப்போது சூர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை ஜுலையில் கௌதம் தொடங்குகிறார். மாற்றான் படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யாவும் அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 வில் நடிக்கிறார்.

இவர்கள் தத்தமது புராஜெக்ட்களை முடித்ததும் துப்பறியும் ஆனந்த் படத்துக்காக இணைகிறார்கள். படத்தின் பெயர் மாற்றப்படலாம்.

இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பார் என தெரிகிறது. முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப்பிடம் கேட்டுள்ளனர். விரைவில் படம் குறித்து கௌதம் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

Comments