
சென்னை::அமீர் இயக்கத்தில் 'பகவான்' மற்றும் ஜனநாதன் இயக்கத்தில் 'பூலோகம்' ஆகியப் படங்களில் நடித்துகொண்டிருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக நடிக்கவிருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் நாயகியாக அமலா பால் நடிக்கிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மேக்னா ராஜ் நடிக்கிறார்.
'நிமிர்ந்து நில்' என்ற தலைப்பே இது ஒரு ஆக்ஷன் கலந்த புரட்சிகரமான படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. இதற்கியிடையில் இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஜெயம் ரவி முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment