
சென்னை::5. மறுபடியும் ஒரு காதல்
சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் மிகக்குறைவான வசூலையே பெற்றுள்ளது. அதாவது 1.63 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
4. தடையறத் தாக்க
அருண் விஜய் நடித்திருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியாக ஓகே என்றாலும் வசூலில் சுமாராகவே உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 2.5 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை இப்படத்தின் வசூல் 47 லட்சங்கள்.
3. முரட்டுக்காளை
சுந்தர் சி. நடித்திருக்கும் இந்த ரீமேக் படம் எதிர்பார்த்ததைப் போலவே மிகச்சுமாரான ஓபனிங்கை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 13 லட்சங்கள் மட்டுமே.
2. மனம் கொத்திப் பறவை
கடந்த இரண்டு வாரங்களின் அதிசயம் என்று சொல்லலாம் மனம் கொத்திப் பறவையை. சுமாரான இந்தப் படம் வசூலில் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 13.9 லட்சங்கள். இதுவரை 1.27 கோடியை சென்னையில் வசூல் செய்துள்ளது.
1. கலகலப்பு
ஐந்தாவது வாரம் முடிந்த நிலையிலும் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் கலகலப்பே முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 14.5 லட்சங்கள். இதுவரை சென்னையில் 6.19 கோடிகளை வசூல் செய்துள்ளது.
Comments
Post a Comment